Responsive Advertisement
Responsive Advertisement

 தேவையான பொருட்கள்

▪️பாதி உளுந்து - 1கப்

▪️கோதுமைமா - 1 கப்

▪️அவித்த கோதுமைமா - 1 கப்

▪️இடித்த செத்தல் துகள் - 2 மே.க

▪️பெருஞ்சீரகம் - 1 மே.க

▪️உப்பு - தேவையானளவு

▪️எண்ணெய் - தேவையானளவு


செய்முறை 

◾️முதலில் உளுந்தை 3 லிருந்து 4 மணிநேரம் ஊறவிடவும்.

◾️அதன் பின்னர் ஊறிய உளுந்தை நன்கு கழுவி தண்ணீரை நன்கு வடித்து எடுத்துக்கொள்ளவும்.

◾️பின்பு அதில் சாதாரண கோதுமை மா, அவித்த கோதுமை மா, பெருஞ்சீரகம், இடித்த செத்தல் (chilli flakes), தேவையானளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

◾️பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்துகொள்ளவும்.

◾️உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகள் பிடித்துக்கொள்ளவும்.

◾️பின்பு உருண்டையில் மாவு தடவி ஒரு பலகையில் வைத்து ஒவ்வொரு உருண்டையாக உருட்டு கட்டையால் உருட்டவும்.

◾️பின்னர் ஒரு வட்ட கப் அல்லது கிண்ணத்தால் வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.

◾️பின்னர் வெட்டிய வட்ட வடிவ துண்டை இரண்டு உள்ளங்கைக்கு நடுவில் வைத்து அழுத்திக்கொள்ளவும்.

◾️இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து கொள்ளவும்.

◾️இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

◾️எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது பருத்தித்துறை வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

◾️வடைகளை கருக விடாது பொரித்து எடுக்கவும்.

◾️இப்பொழுது மொறு மொறு பருத்தித்துறை வடை Ready😊

வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும் 👇



Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement