Responsive Advertisement
Responsive Advertisement

  தேவையான பொருட்கள்

◾️கடலைப்பருப்பு - 1கப்

◾️வெங்காயம் - 1

◾️கறி வேப்பிலை - சிறிதளவு

◾️பச்சை மிளகாய் - 1

◾️செத்தல் மிளகாய் - 4

◾️பெருஞ்சீரகம் - 1தே.க

◾️இஞ்சி - சிறிய துண்டு

◾️பூண்டு - 4 பல்லு

◾️உப்பு - தேவையானளவு

◾️எண்ணெய் - தேவையானளவு






செய்முறை

◾️ முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி 3 லிருந்து 4 மணிநேரம் வரை உறவைக்கவும்.

◾️ஊறிய கடலைப்பருப்பு, இஞ்சி, உள்ளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  (அரைக்க முதல் 1 மே.க கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்)

◾️அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

◾️பின்னர் அரைத்த பொருட்களுடன் அரைக்காமல் எடுத்து வைத்த 1 மே.க கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், செத்தல் மிளகாய், கறி வேப்பிலை, பெருஞ்சீரகம், தேவையானளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

◾️அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.

◾️எண்ணெய் சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து உருண்டையாக பிடித்து பின்னர் தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

◾️சுவையான மொறு மொறு கடலைப்பருப்பு வடை Ready😊


கடலைப்பருப்பு வடை செய்முறை வீடியோ


Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement