Responsive Advertisement
Responsive Advertisement

  தேவையான பொருட்கள்

1• உளுந்து - 250g

2• சின்ன வெங்காயம் - 50g

3• பச்சை மிளகாய் - 5-6

4• கறி வேப்பிலை - தேவையான அளவு

5• மிளகு - 1 மே.க

6• உப்பு - தேவையானளவு

7• எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

* முதலில் உளுந்தை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

* பின்னர் அதை கழுவி மிக்ஸியில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் அரைக்கவும்.

* அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

* மாவில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். இதுவே சரியான பதம்.

* இப்பொழுது அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் போடவும்.

* அதன் பின்னர் பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, இடித்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும்.

* தண்ணீரில் கையை நனைத்து சிறிதளவு மாவை கையில் எடுத்து தட்டி நடுவில் துளை இட்டு எண்ணெயில் போடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் மற்ற பக்கம் திருப்பி வேக விடவும்.

* எண்ணெயில் குமிளிகள் அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.

*சுவையான மொறு மொறு உளுந்து வடை Ready 😊

உளுந்து வடை செய்முறை வீடியோ


Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement