Responsive Advertisement
Responsive Advertisement

  தேவையான பொருட்கள்

1• டின் பால் - 400 ml 

2• தண்ணீர் - 100 ml

3• சீனி - 400g 

4• பட்டர் - 2 மே.க

5• வெனில்லா - 1 தே.க

6• ஏலக்காய் தூள் - 1/4 தே.க

7• கஜூ (முந்திரி) - 20g

8• உப்பு - சிறிதளவு 


செய்முறை

* முதலில் ஒரு தட்டில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து வைத்துக்கொள்ளவும்.

* பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் டின் பாலை ஊற்றவும். டின் பால் வந்த டின் க்குள் கால்வாசி அளவுக்கு தண்ணீர் விட்டு கழுவி அதையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.

* இப்பொழுது அடுப்பை போட்டு இரண்டையும் சிறிது நேரம் கலந்து கொள்ளவும்.

* பின்னர் இதற்குள் சீனியை சேர்த்து  அடுப்பை நடுத்தர சூட்டில் வைத்து காய்ச்சவும்.

*  கைவிடாது தொடர்ந்து கிளறவும்.

* 15 நிமிடத்தின் பின்னர் பார்த்தால் சிறிது இறுக்கமாக ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். (ஒரு சிடிக்கை அளவு சேர்க்கவும்)

* 20 நிமிடத்தின் பின்னர் 2 மே.க பட்டர் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

* 25 நிமிடத்துக்கு பின்னர் அடுப்பை கொஞ்சம் குறைத்து தொடர்ந்து கிளறவும்.

* இப்பொழுது 1 மே.க வென்னிலா சேர்த்து கிளறவும். பின்னர் அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூளும் சேர்த்து கிளறவும்.

* பின்னர் 20g முந்திரியை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்து கிளறவும்.

* 30 நிமிடத்திற்கு பின்னர் பார்த்தால் சரியான பதத்தில் வரும். சரியான பதம் பார்ப்பதற்கு கரண்டியால் கிள்ளி ஊற்றும் போது கட்டி கட்டியா விழ வேண்டும்.

* அதன் பின்னர் உடனேயே அடுப்பில் இருந்து எடுத்து பட்டர் தடவிய தட்டில் ஊற்றி பரப்பி விடவும்.

* சூடு ஆற முதலே ஒரு கத்தியில் பட்டர் தடவி சிறு சிறு துண்டாக கீறி விடவும். (ஆறிய பிறகு வெட்ட முடியாது)

* நன்கு ஆறிய பின்னர் பரிமாறவும்.

* சுவையான மில்க் டொபி Ready 😊




Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement