Responsive Advertisement
Responsive Advertisement

 பாட்டி மருத்துவக் குறிப்புகள்




1• உதட்டு வெடிப்பு ✴️ கருப்பு சக்கரையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

2• குடல் புண் ✴️ மஞ்சளை தணலில் இட்டு சம்பலாகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

3• வயிற்று வலி ✴️ வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி  செய்து அதை மோரில்  கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

4• தொடர் விக்கல் ✴️ நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5• மலச்சிக்கல் ✴️ செம்பருத்தி இலைகளை காய வைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

6• பித்தவெடிப்பு ✴️ கண்டங்கத்தரி இலைச்சாற்றை ஆலீவ் எண்ணெயில் காய்ச்சி பூசி வந்தால் பித்தவெடிப்பு குணமாகும்.

7• தேமல் ✴️ வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மைய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

8• மூலம் ✴️ கருணைக்கிழங்கை சிறு தூண்டுகளாக வெட்டி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

9• மூக்கடைப்பு ✴️ ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சக்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10• நெஞ்சுச் சளி ✴️ தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து ஆறிய பின் நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement