Responsive Advertisement
Responsive Advertisement

   தேவையான பொருட்கள்

1. கடலை மா - 2கப்
2. சீனி - 2கப்
3. தண்ணீர் - 1கப்
4. பொடித்த ஏலக்காய் - 1/2 தே.க
5. முந்திரி, உலர் திராட்சை
6. நெய் - சிறிதளவு 
7. Food கலர் - சிறிதளவு 
8. எண்ணெய் - பொரிக்க தேவையானஅளவு


செய்முறை

1• முதலில் சீனியுடன் தண்ணீர் சேர்த்து பாகு (ஒரு கம்பி பதம்) காச்சிக்கொள்ளவும்.

2• கடலை மாவுடன் food கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

3• பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

4• பின்னர் கடாயின் மேல் ஒரு பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி இன்னொரு கரண்டியால் தட்டவும். முத்து முத்தாக விழும். அதை நன்கு முறுக விடாமல் சரியான பதத்தில் எடுக்கவும்.

5• பொரித்த பூந்தியில் சிறிதளவை எடுத்து கிரைண்டரில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

6• பின்னர் பொரித்த பூந்தி, அரைத்த பூந்தி இரண்டையும் சீனி பாகில் சேர்க்கவும். அதனுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து லட்டு பிடிக்கவும்.

7• சுவையான பூந்தி லட்டு Ready😊

Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement