Responsive Advertisement
Responsive Advertisement
பொடுகு தொல்லை நீங்க..


🔴 ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து கலந்து தலைக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு தலையை கழுவி வந்தால் பொடுகு நீங்கும்.

🔴 100g தேங்காய் எண்ணெயில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50g போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூட்டு பதத்துக்கு ஆறிய பிறகு வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற விட்டு பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர பொடுகு நீங்கும்.

🔴 தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

🔴 அரைத்த மருதாணி இலையுடன் கொஞ்சம் தயிர், கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் பூசினால் பொடுகு தொல்லை நீங்கும்.

🔴 தேங்காய் எண்ணெயுடன் வேப்பம் எண்ணெயும் சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் பொடுகு நீங்கும்.

🔴 வேப்பிலைச்சாறும், துளசி சாறும் கலந்து தலைக்கு பூசி வர பொடுகு நீங்கும்.

🔴 தேங்காய் எண்ணெயுடன் அறுகம்புல் சாறு சேர்த்து தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.

🔴 பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

🔴 தலை சருமத்தில் எலுமிச்சை சாற்றை தடவி நன்கு மசாஜ் செய்து 15-20 நிமிடத்தின் பின் குளித்தால் பொடுகு குறையும்.

🔴 இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்து அதை தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து தலையை கழுவவும். இவ்வாறு செய்து வர பொடுகு குறையும்.

Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement