Responsive Advertisement
Responsive Advertisement

றிங் முறுக்கு

(Srilankan Bites)




தேவையான பொருட்கள்

1>• ஈஸ்ட் - 7g 

2>• சீனி - 1/2 தே.க 

3>• வெதுவெதுப்பான தண்ணீர் - 200ml

4>• கோதுமை மா - 2கப்

5>• உப்பு - தேவையானளவு 

6>• வூட் கலர் - 1/2 தே.க

7>• எண்ணெய் - பொரிப்பதற்கு

8>• மிளகாய்த்தூள்




செய்முறை

◾️முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஈஸ்ட், சீனி போட்டு பின்னர் அதில் வெது வெதுப்பான தண்ணீரை (100ml) ஊற்றி 10 நிமிடங்கள் வைக்கவும்.

◾️அதன் பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் மா, உப்பு, வூட் கலர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

◾️பின்னர் அதில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள ஈஸ்ட் கலவையையும் சேர்த்து கலக்கவும்.

◾️இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு குழைத்துக் கொள்ளவும். (சப்பாத்தி மா பதத்திற்கு குழைக்கவும்)

◾️நன்றாக குழைத்த பின்னர் உருண்டையாக்கி பின்னர் மூடி 2 மணிநேரத்திற்கு வைக்கவும்.

◾️2 மணிநேரத்தின் பின்னர் மா இரண்டு மடங்காக ஊதி இருக்கும்.

◾️பின் அந்த மாவில் உள்ள காற்றை அழுத்தி விட்டு, கிட்சன் மேற்பரப்பில் சிறிது மா தூவி அதன் மேல் மா உருண்டையை வைத்து உருட்டி கொள்ளவும்.

◾️ஆகலும் மொத்தமாகவும் இல்லாமலும், ஆகலும் மெல்லிசாகவும் இல்லாமலும் நடுத்தரமாக உருட்டவும்.

◾️பின்னர் இரண்டு மூடிகள் எடுத்து கொள்ளவும் (ஒன்று பெரிதாவும் மற்றது கொஞ்சம் சிறிதாகவும் இருக்க வேண்டும்)

போத்தல் மூடிகள் 





◾இப்பொழுது உருட்டிய மாவில் முதலில் பெரிய மூடியால் வட்டமாக வெட்டிக்கொள்ளவும் பின்பு அதற்கு நடுவில் சிறிய மூடியால் வட்டமாக வெட்டவும்.

◾️எல்லா மாவிலும் இதே போல் செய்து கொள்ளவும்.

◾️இப்பொழுது வெட்டிய துண்டுகளை மா தூவிய தட்டில் வைக்கவும்.


◾️பின்பு எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் வெட்டி வைத்துள்ள துண்டுகளை பொரித்தெடுக்கவும். (கருக விடாது பொரித்தெடுக்கவும்)

◾️பொரித்தெடுத்த பின்னர் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

◾️ஆறிய பின்பு காற்று போகாத போத்தலில் போட்டு வைத்தால் 2 லிருந்து 3 கிழமை வரை பழுதடையாது மொறு மொறுப்பாக இருக்கும்.

வீடியோ பார்க்க இங்கே அழுத்தவும் 👇

https://youtu.be/cjnKQy5T1d4




Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement