Responsive Advertisement
Responsive Advertisement

 ரவா லட்டு



தேவையான பொருட்கள்

◾️ ரவை - ½ kg

◾️சீனி - ½ kg

◾️நெய் - 6 மே.க 

◾️முந்திரி (கஜு) - 50g

◾️உலர் திராட்சை - 20g

◾️ஏலக்காய் - 12

◾️பால் - 250ml







செய்முறை

1>• முதலில் முந்திரியை சிறுசிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பின்னர் உலர் திராட்சையையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.

2>• ஏலக்காயை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

3️>• பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.

4️>• ஒரு வாணலியில் 4 ஸ்பூன் நெய் விட்டு ரவையை 5 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் அதனோடு சீனியை சேர்த்து கிளறவும். (அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவும்)

5>• சீனி ஓரளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும். இப்பொழுது ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

6️>• கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்க்கவும்.

7️>• பின்னர் சூடான ரவை கலவையில் மிதமான சூட்டில் இருக்கும் பாலை ஊற்றி கலந்து பின்னர் லட்டு பிடித்துக்கொள்ளவும்.

⭕️சுவையான லட்டு Ready😊



Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement