Responsive Advertisement
Responsive Advertisement

    தேவையான பொருட்கள்

▪️ தோல் நீக்கப்பட்ட உளுந்து - 1 கப்

▪️ இட்லி அரிசி - 4 கப்

▪️ உப்பு - தேவையான அளவு


செய்முறை

•> முதலில் உளுந்தையும், அரிசியையும் தனித்தனி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும்.

•> ஊற வைத்த உளுத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போது உளுந்து ஊறிய தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாக மாவு பதத்தில் அரைக்கவும்.

•> பின்னர் அரைத்த உளுந்தை வழித்து எடுத்துவிட்டு ஊற வைத்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவாக அரைத்துக்கொள்ளவும்.

•> பின்னர் உளுந்து மா கலவையையும், அரிசிமா கலவையையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

•> பின்னர் அந்த பாத்திரத்தை மூடி 8 மணி நேரம் புளிக்க விடவும்.

•> 8 மணிநேரத்திற்கு பிறகு மாவு கலவையை பார்க்கும் போது அதில் நுரைகள் அதிகம் காணப்படும். இதுவே மா நன்கு புளித்ததற்கான அறிகுறி.

•> இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

•> இட்லி தட்டில் சுத்தமான பருத்தி துணியை விரித்து அதில் இட்லி மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி 15 இலிருந்து 20 நிமிடம் வரை வேகவைக்கவும்.

•> 15 இலிருந்து 20 நிமிடங்கள் வரை அவிய விட்டால் மிருதுவான இட்லி கிடைக்கும். அதற்கு மேல் அவிய விட்டால் இட்லி இறுகிவிடும்.

* பூ போன்ற இட்லி Ready😊


Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement