Responsive Advertisement
Responsive Advertisement

தேவையான பொருட்கள்

◾️மா - 1kg

◾️ஈஸ்ட் - 5 தே.க 

◾️சீனி - 2 மே.க 

◾️தண்ணீர் - 2 1/2 கப் 

◾️எண்ணெய் - 1/4 கப் 

◾️உப்பு



செய்முறை

◾️முதலில்   ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட் மற்றும் சீனியை போடவும். அதில் வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு, கலந்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.

◾️அதன் பிறகு  ஊற வைத்த ஈஸ்ட் கலவையுடன்  மா, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை  சேர்த்து குழைத்து, அதனை 45 நிமிடங்கள் புளிக்க வைக்கவும். மா நன்கு ஊதி வரும். 

◾️ஊதி வந்த மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து குழைத்து, 2 பங்காக பிரிக்கவும்.

◾️1 பங்கு மாவை நீள்சதுரமாக தட்டி உருட்டி, பட்டர் பூசிய 1 ½ லீட்டர் பாண் அச்சில் வைத்து, பிளாஸ்டிக் பேப்பரால் அல்லது துணியால் மூடி, 2 மடங்காக ஊதி வரும் வரை புளிக்க வைக்கவும்.

◾️2வது பங்கு மாவை 3 பங்காக பிரித்து நீளமாக உருட்டி, பிண்ணல் போல் பிண்ணவும். பேக்கிங் தட்டில், பேக்கிங் பேப்பர் விரித்து, பிண்ணல் பாண் மாவை வைத்து, பிளாஸ்டிக் பேப்பரால் அல்லது துணியால் மூடி, 2 மடங்காக ஊதி வரும் வரை புளிக்க வைக்கவும்.

◾️ஊதி வந்த பாண் மாவின் மேல், தண்ணீர்/பால் பூசவும். 

◾️ஒவனை 200 °C ல் சூடாக்கி, சூடான ஒவனில் பாணை 40 நிமிடங்கள் வேக வைக்கவும். விரும்பினால் சூடான பாணில் பட்டர் பூசி ஆற விடவும்.

◾️சுவையான பாண் Ready😊




Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement